Categories
உலக செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இங்கிலாந்து பிரதமர் திடீர் பயணம்…. வெளியான தகவல்….!!!!

ஐக்கியஅரபு அமீரகத்திற்குஇங்கிலாந்து நாட்டு பிரதமர் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவரான ஷேக் கலிஃபா பின் ஷயத் அல் நயான், உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். 73 வயதான இவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த‌தாக அதிபர் மாளிகை அறிவித்தது. இவ்வாறு அதிபரின் மறைவுக்கு பிறகு இங்கிலாந்தின் பிரதமரான போரிஸ்ஜான்சன், அங்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
இங்கிலாந்து நாட்டு பிரதமரின் இந்த வருகை இருநாடுகளுக்கும் இடையேயான பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இங்கிலாந்து பிரதமர் கடைசியாக சென்ற மார்ச் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |