நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு வெளியிடப்படும் என அரசு அறிவித்தது.
இந்நிலையில் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (ஐசிஎஸ்இ) 10, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் தற்போது வெளியாகியுள்ளது. கொரோனா சூழலால் தேர்வுகள் நடைபெறாத நிலையில் முந்தைய வகுப்புகள் மற்றும் தேர்வுகளில் மாணவர்களின் செயல்திறன் அடிப்படையில் இறுதி தேர்வுக்கான மதிப்பெண்களை கணக்கிட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் cisce.org மற்றும் results.cisce.org ஆகிய இணைய தளங்களில் காணலாம்.