Categories
தேசிய செய்திகள்

ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களே…. பிப்ரவரி 10ஆம் தேதி முதல் அமல்…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு திடீரென்று அதிர்ச்சியான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி கிரெடிட் கார்டு கட்டணங்களை உயர்த்தி ஐசிஐசிஐ வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் புதிய கட்டணங்கள் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இதன்படி கிரெடிட் கார்டுகள் அனைத்துக்கும் ரொக்கப் பண பரிவர்த்தனைகளுக்கு 2.50 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும். குறைந்தபட்ச கட்டணம் ரூ 500 என்பது கவனிக்கத்தக்கது .
மேலும் செக் ரிட்டன், ஆட்டோ டெபிட் போன்றவற்றுக்கு மொத்த நிலுவைத் தொகையில் 2 சதவீதம் கட்டணம் ஐசிஐசிஐ வங்கி நிர்ணயித்துள்ளது. இதற்கும் குறைந்தபட்ச கட்டணம் 500 ரூபாய் ஆகும். ICICI Emerald Card தவிர வேறு அனைத்து கிரெடிட் கார்டுகளுக்கும் தாமதமாக நிலுவைத் தொகை செலுத்துவதற்கான கட்டணமும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

இதனிடையில் 100 ரூபாய்க்கு குறைவான நிலுவைத் தொகைக்கு எந்தக் கட்டணமும் கிடையாது. 101 ரூ முதல் 500 ரூ வரை நிலுவைத் தொகைக்கு 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
இதையடுத்து 501 முதல் 5000 ரூ வரையிலான நிலுவைத் தொகைக்கு 500 ரூ கட்டணம் செலுத்த வேண்டும். அதன்பின் 5001 முதல் 10000 ரூ வரையிலான நிலுவைத் தொகைக்கு 750 ரூ கட்டணம் செலுத்த வேண்டும். 10001 ரூ முதல் 25000 ரூ வரையிலான நிலுவைத் தொகைக்கு 900 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். 25001 முதல் 50000ரூ வரையுள்ள நிலுவைத் தொகைக்கு 1000 ரூ கட்டணம் செலுத்த வேண்டும். 50,000 ரூபாய்க்கு மேற்பட்ட நிலுவைத் தொகைக்கு 1200ரூ கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |