Categories
தேசிய செய்திகள்

ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு… புதிய வட்டி விகிதம்…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

இந்தியாவில் கொரோனா காலக்கட்டத்திற்கு பின் பொதுமக்கள் தங்களின் வருமானத்தை பாதுகாப்பான முறையில் சேமிக்க துவங்கினர். அந்த வகையில் தற்போது ஏராளமானோர் தங்களின் சேமிப்பு பணத்தை வங்கிகளில் (அல்லது) அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்துவந்தனர். அதுமட்டுமல்லாமல் வங்கிகளில் முதலீடு செய்வதால் குறைந்த தினங்களில் அதிகமான லாபத்தை பெறமுடியும். அத்துடன் தற்போது பல்வேறு வங்கிகளில் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இப்போது நாட்டில் பணவீக்கம் அதிகரித்து இருப்பதால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.

இந்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை ICICI வங்கி வெளியிட்டு இருக்கிறது. அதன்படி பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. அதாவது 2கோடி ரூபாய்க்கு உட்ப்பட்ட பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. தற்போது எத்தனை தினங்களுக்கு எவ்வளவு வட்டி விகிதம் வழங்கப்படுகிறது என்பதை விரிவாக தெரிந்து கொள்வோம். இவற்றில் 290 தினங்கள் முதல் 10 வருடங்கள் வரை பல வகையான காலங்களுக்கு வட்டி விகிதமானது குறைந்தபட்சம் 2.50 சதவீதம் முதல் 5.75 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இதில் 2கோடி ரூபாய்க்கு உட்பட்ட பிக்சட்டெபாசிட் திட்டத்தில் 7 -29 நாட்கள் வரையிலான சேமிப்பு திட்டத்துக்கு 2.50 சதவீதம் வட்டி விகிதமானது வழங்கப்படுகிறது. இதேபோன்று 30 முதல் 90 தினங்கள் வரையிலான சேமிப்பு திட்டத்துக்கு 3 சதவீதம் வட்டி விகிதமும், 91 முதல் 184 நாட்கள் வரை 3.5 சதவீதம் வட்டி விகிதமும், 185 முதல் 289 நாட்கள் வரை 4.40 சதவீதம்  வட்டி விகிதமும், 290 முதல் 1 வருடகாலத்திற்கு 4.50 சதவீதம் வட்டி விகிதமும் வழங்கப்படுகிறது. இது நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |