Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி ஒருநாள் தரவரிசை: விராட் கோலியை நெருங்கும் ரோகித் சர்மா…!!!

ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் 873 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
ஐசிசி ஒருநாள் போட்டிக்கான வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.இதில்
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் 873 புள்ளிகளுடன் முதலிடத்திலும்,இந்திய அணியில் விராட் கோலி 828 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். இதையடுத்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 807 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். இந்நிலையில் தரவரிசையில் விராட் கோலியை, ரோகித் சர்மா நெருங்க உள்ளார்.இதில் கோலியை விட 21 புள்ளிகள் மட்டுமே ரோகித் சர்மா பின் தங்கி உள்ளார் .
இதில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் போட்டியில் அபாரமாக விளையாடிய ரோகித் சர்மா  நேற்றைய போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும் கடைசி போட்டியில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் 2-வது இடத்திற்கு முன்னேற முடியும். அதே சமயம்  விராட் கோலி முதல் 2 போட்டியிலும் சரியாக விளையாடவில்லை. இதனால் அவர்  கடைசி போட்டியில் ரன் குவித்தால் மட்டுமே 2-வது வரிசையை தக்கவைத்துக் கொள்ள முடியும் .

Categories

Tech |