டி20 பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அவ்வப்போது டி20 பேட்டிங் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகின்றது. அதன்படி நேற்று ஐசிசி டி20 பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக வெளியிட்ட டி20 தரவரிசை பட்டியலில் சூர்யகுமார் யாதவ் முதலிடம் பிடித்தார். அதனை தற்போது அப்படியே 859 புள்ளிகளுடன் தக்க வைத்துள்ளார் சூர்யா. அதேபோல பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் முகமது ரிஸ்வான் 836 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளார்.
மேலும் 3ஆவது இடத்தில் இருந்த நியூசிலாந்து அணியின் டெவான் கான்வே 4ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 3ஆவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார். அதே சமயம் இந்தியாவுக்கு எதிரான டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் 47 பந்துகளில் 86 ரன்கள் விளாசிய இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடியாக 22 இடங்கள் முன்னேறி 12 வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
டி20 பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் சூர்யகுமார் யாதவ் மட்டுமே முதல் பத்து இடங்களுக்குள் இருக்கிறார். மற்றபடி எந்த இந்திய பேட்டரும் இல்லை. மேலும் விராட் கோலி 11 வது இடத்தில் இருக்கிறார். அதற்கு அடுத்தபடியாக கே எல் ராகுல் 17 மற்றும் ரோகித் சர்மா 18 ஆகிய இடங்களில் உள்ளனர்.
அதேபோல டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் இலங்கை அணி வீரர் வனிந்து ஹசரங்கா முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் மற்றும் இங்கிலாந்து வீரர் அடில் ரசித் ஆகியோர் இருக்கின்றனர். மேலும் நடந்து முடிந்த 2022 டி20 உலக கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்ற சாம் கரன் 5ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.. ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் பங்களாதேஷ் வீரர் ஷகிப் அல் ஹாசன் முதலிடம் பிடித்துள்ளார். அதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபியும், மூன்றாவது இடத்தில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியாவும் இருக்கின்றனர்.
ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசை :
1 சூர்யகுமார் யாதவ் – 859 புள்ளிகள் (இந்தியா)
2. முகமது ரிஸ்வான் – 836 புள்ளிகள் (பாகிஸ்தான்)
3. பாபர் அசாம் – 778 புள்ளிகள் (பாகிஸ்தான்)
4. டெவோன் கான்வே – 771 புள்ளிகள் (நியூசிலாந்து)
5. ஐடன் மார்க்ரம் – 748 புள்ளிகள் (தென்னாப்பிரிக்கா)
6. டேவிட் மலான் – 719 புள்ளிகள் (இங்கிலாந்து)
7. ரீலி ரூஸோவ் – 693 புள்ளிகள் (தென்னாப்பிரிக்கா)
8. கிளென் பிலிப்ஸ் – 684 புள்ளிகள் (நியூசிலாந்து)
9. ஆரோன் பிஞ்ச் – 680 புள்ளிகள் (ஆஸ்திரேலியா)
10. பதும் நிஷாங்கா – 673 புள்ளிகள் (இலங்கை)
Top #T20WorldCup performers biggest gainers in the latest @MRFWorldwide ICC Men’s T20I Player Rankings.
Details 👇https://t.co/MKEWVUpZCs
— ICC (@ICC) November 16, 2022