Categories
உலக செய்திகள்

ஐசியூவில் அதிகரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை…. மோசமான நிலைக்கு செல்லும் பிரான்ஸ்…. எச்சரிக்கை விடுத்த மருத்துவ குழுவினர்…!!

பிரான்சில் கொரோனா பரவல் அதிகரித்து கொன்டே வருவதாக மருத்துவ குழுவினர் பிரதமருக்கு எச்சரிக்கை கடிதம் எழுதியுள்ளனர்.

பிரான்சில் நாளுக்கு நாள் கொரோனாவின் மூன்றாவது அலை மிக வேகமாக பரவி வருகின்றது. இதனால் அந்நாட்டில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பால் 4800 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலின் தீவிர சிகிச்சை பிரிவில் பணிபுரிந்து வரும் ஒன்பது மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் பிரான்ஸ் நாட்டு பிரதமருக்கு எச்சரிக்கை விடுத்து ஒரு கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில் பிரான்ஸ் நாட்டில் தீவிர சிகிச்சை பிரிவில் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொன்டே வருவதாகவும், இந்த நிலை இன்னும் மோசமாகும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மருத்துவர்கள் யாரும் இதுவரை இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையை சந்திக்கவில்லை என்றும் இதற்கு காரணம் பிரான்ஸ் நாட்டில் கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்பட்டது தான் என்றும் மருத்துவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அது மட்டுமின்றி இந்த நிலை மீண்டும் நீடித்தால் மருத்துவமனையில் மக்கள் நெருக்கடிக்குள்ளவர்கள் என்றும் இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் பணிபுரியும் மருத்துவர்கள் எந்த நோயாளிக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் யாரை வெளியே அனுப்ப வேண்டும் என்று சோதனை செய்து முடிவெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |