காதல் ஜோடிகள் ஐசியுவில் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் பிரையன், எலிசபெத் என்ற ஜோடி ஐசியூவில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இருவரும் காதலித்து திருமணம் செய்ய இருந்த நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பிரையனுக்கு தீவிர தொற்று ஏற்பட்டதால் 80% அவர் இறப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து கைவிட்டுள்ளனர்.
இதனால் இறப்பதற்கு முன் அவர்கள் ஐசியூவிலேயே திருமணம் செய்துள்ளனர். தற்போது திருமணம் முடிந்த நிலையில் பிரையனின் உடல்நிலை விரைவாக குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.