தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள இடங்கள் அனைத்தும் தனியாருக்கு செல்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மின்சார வாரியத்தில் ஐடிஐ படித்தவர்கள் அதிக அளவு வேலை செய்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 12 ஆயிரம் இடங்கள் தனியாருக்கு செல்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 12000 உதவியாளர், வயர் மேன் பணியிடங்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் ஆட்கள் நியமனம் நடைபெறுகிறது.
மேலும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுபவர்கள் மூன்று ஆண்டுகள் பணியில் இருப்பார்கள். அரசின் தனியார்மய நடவடிக்கையால் இனி ஐடிஐ படித்தவர்கள் நேரடியாக மின்வாரியத்தின் வயர்மேன் வேலையில் சேர முடியாது என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்த திடீர் அறிவிப்பு ஐடியை படித்தவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.