Categories
மாநில செய்திகள்

ஐடிபிஐ வங்கி விற்பனை… அடுத்த கட்ட நடவடிக்கை… மத்திய அரசு அறிவிப்பு…!!!

ஐடிபிஐ வங்கி விற்பதற்கான விருப்ப மனுக்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஐடிபிஐ வங்கி விற்பனை செய்வதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஐடிபிஐ வங்கி விற்பதற்கான விற்பனை மனுக்கள்  இன்னும் வெளியிடப்படவில்லை, எனவும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக விளம்பரம் செய்து வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது பற்றி நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நிதித்துறை இணை அமைச்சர் அளித்துள்ள பதிலில் “ஐடிபிஐ வங்கியில் அரசுக்கும் எல்ஐசி நிறுவனத்திற்கும் இருக்கும் பங்குகளை விற்பனை செய்ய 2021 மே மாதம் 18 கேபினட் குழு  ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்பின் விருப்ப மனுக்களை வெளியிடுவதற்கு முன் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக விளம்பரங்கள் செய்யப்படுகிறது” எனவும் கூறியுள்ளார். இந்நிலையில் வரும் ஏப்ரல் மாதம் மனுக்கள்  வெளியாகும் என அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகிறார்கள். மத்திய அரசு நிறுவனத்திற்கு மொத்தமாக 94.71% பங்குகள்  இருக்கிறது.இதில் எல்ஐசி நிறுவனத்திற்கே அதிகபட்ச பங்கு உள்ளது. ஐடிபிஐ வங்கியில் அரசுக்கும், எல்ஐசிக்கும் உள்ள பங்குகளை விற்பனை செய்வதற்கு அரசு முடிவு செய்திருக்கிறது. பங்குகள் விற்பனை செய்யப்பட்டு புதிய நிர்வாகம் வந்தபின்அரசையும், எல்ஐசி நிறுவனத்தையும் சாராமல் எல்ஐசி வங்கி சுயமாக தொழிலில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதித்துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

Categories

Tech |