உலக மக்களை அச்சுறுத்தி வரக்கூடிய கொரோனா பிரச்சனையை விட சுற்றுச்சூழல் பிரச்சனை பெரும் சவாலாக திகழ்கிறது. சுற்றுச்சூழல் பிரச்சனையால் வருங்கால சந்ததியினர் மட்டுமல்லாமல், தற்போது இருக்கக்கூடிய மக்களும் எதிர் காலத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும் என்பதாலும், பூமியை பாதுகாப்பது என்பது முக்கிய கடமை என்பதற்காக,
உலக நாடுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த சுற்றுச்சூழல் பிரச்சனையை எதிர்கொள்ள புதுமையான தீர்வுகளை அளிப்பவர்களுக்கு எர்த்சாட் பரிசு என்ற புதிய பரிசை இங்கிலாந்து இளவரசர் வில்லியம் அறிமுகம் செய்துள்ளார். மேலும் ஒவ்வொரு ஆண்டுக்கும் இந்திய மதிப்பில் ரூபாய் 9 கோடியே 48 லட்சம் பரிசுத் தொகை அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.