Categories
தேசிய செய்திகள்

ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை தக்கவைக்க பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் சற்று ஓய்ந்து இருந்தாலும் அடுத்தடுத்து அலைகள் வந்து கொண்டே இருக்கின்றது. இந்த காலகட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக ஒரு துறை மிகுந்த வளர்ச்சி கண்டது எனில் அது ஐடி துறை. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக ஐடி நிறுவனங்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. அதிலும் தங்களது ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு யுக்திகளை கையாண்டு வந்தாலும் அது எதுவும் பெரிதாகத் கை கொடுத்ததாக தெரியவில்லை.

அதற்கு மாறாக ஊழியர்கள் வெளியேறும் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் ஐடி ஊழியர்களை தக்கவைத்துக்கொள்ள ஐடி நிறுவனங்கள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றது. தற்போது பிரெஷ்ஷர்களுக்கு இதுவரை கொடுக்கப்பட்டு வந்த சம்பளத்தை விட 15 சதவீதத்துக்கும் மேல் உயர்த்த ஐடி நிறுவனங்கள் முன்வந்துள்ளன .2022 ஆம் நிதியாண்டில் மட்டும் 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் பிரெஷ்ஷர்கள். இதுபோல அடுத்த நிதி ஆண்டிலும் பிரெஷ்ஷர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Categories

Tech |