Categories
மாநில செய்திகள்

ஐடி நிறுவனங்கள் 20% பணியாளர்களுடன் அனுமதி – அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன்  கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்த ஊரடங்கானது வருகிற 14-ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி தகவல் தொழில்நுட்பம் / தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் 20 சதவீத பணியாளர்கள் அல்லது பத்து நபர்கள் மட்டும் பணிபுரிய அனுமதிக்கப்படுவர் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது .

Categories

Tech |