4 நாடுகள் கலந்து கொண்ட ஐடுயுடு கூட்டம் நடைபெற்றுள்ளது.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ஐடுயுடு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட 4 நாடுகளின் அதிபர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தின் போது 6 துறைகளில் கூட்டு முதலீடு மற்றும் புதிய தொடக்கங்கள் பற்றி விவாதிக்கப்படும். இது தனியார் பிரிவு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் நடைபெறும். இந்நிலையில் 4 நாடுகளின் தலைவர்களும் உணவு பாதுகாப்பு, சுகாதாரம், விண்வெளி, போக்குவரத்து, ஆற்றல், நீர் போன்றவைகள் குறித்து பேசி வருகின்றனர்.
இந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேசியதாவது, நாம் இன்றைய சூழலில் பருவகால நெருக்கடி, வளர்ந்து வரும் உணவு பாதுகாப்பின்மை போன்றவைகள் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. அதன் பிறகு ரஷ்யா உக்ரைன் மீது கொடூரமான தாக்குதலை நடத்தி வருவதால் ஆற்றல் சந்தைகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. அடுத்த 3 வருடங்களுக்குள் புதிய உள்கட்டமைப்பு திட்டங்களை கண்டறிந்து, அதில் முதலீடு செய்து, ஒருங்கிணைந்த வளர்ச்சியை அடைவதற்கு இந்த குழு பணியாற்ற வேண்டும். மேலும் நாம் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் சிறந்த பணிகளை செய்யலாம் எனவும் ஜோ பை டன் கூறியுள்ளார்.