ஹைதராபாத்தில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் போதை மருந்துகளுடன் உல்லாச பார்ட்டியில் முக்கிய பிரமுகர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஐதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் போதை மருந்துகளுடன் உல்லாச பார்ட்டி நடத்திய பிரபல தெலுங்கு நடிகரின் மகள் உள்பட பலரை போலீசார் கைது செய்துள்ளனர். கோக்கைன் உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விடுதியின் இரண்டு உரிமையாளர்கள், மேலாளர் போன்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 125 பேர் அங்கு மது அருந்தி உல்லாசமாக இருந்துள்ளனர். இதில் நடிகர் நாக பாபுவின் மகளும், நடிகர் சிரஞ்சீவியின் உறவினர் நிகாரிகா, பிக்பாஸ் வெற்றியாளராக ராகுல், தெலுங்கு தேசம் எம்.பி.யின் மகன், காவல்துறை அதிகாரியின் மகள் என சில முக்கியப் பிரமுகர்களை போலீசார் கைது செய்து இருக்கின்றனர்.