ஐநா மனித உரிமை மன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கை உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அந்நாட்டு அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து பிரான்ஸ் ,ஜெர்மன் உள்ளிட்ட 22 நாடுகள் வாக்களித்தன.
இந்தியா புறக்கணித்த நிலையில் மேலும் ஜப்பான், இந்தோனீசியா உள்ளிட்ட 13 நாடுகள் இந்தத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இலங்கைக்கு ஆதரவாக சீனா, பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட 11 நாடுகள் வாக்களித்தன.