Categories
உலகசெய்திகள்

ஐநா சபையில் ரஷ்யாவிற்கு எதிரான விவாதம்… பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா…!!!!

வாக்கெடுப்பின் போது உக்ரைன் போர் சூழலை காஷ்மீர் விவகாரத்திற்கு இணையாக ஒப்பிட்டு பாகிஸ்தானிய தூதர் பேசியுள்ளார்.

உக்ரைன் நாட்டின் டொனட்ஸ்க், ஜபோர்ஜியா போன்ற நான்கு பகுதிகளை ரஷ்யா தன்னுடன் இணைத்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஐநா பொது சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது பற்றிய வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு 143 உறுப்புகள் ஆதரவு தெரிவித்தது ஐந்து நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தது. இதனை அடுத்து இந்தியா உட்பட 35 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் விலகி உள்ளது. இருப்பினும் உக்ரைனில் நடைபெற்று வரும் போரில் பொதுமக்களின் உட்கட்டமைப்பும் மீது தாக்குதல் நடத்தப்படுவது மற்றும் குடிமக்கள் உயிரிழப்பு போன்றவற்றிற்கு இந்தியா ஆழ்ந்த வருத்தம் தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில் வாக்கெடுப்பின்போது காஷ்மீர் விவகாரம் பற்றிய பாகிஸ்தானிய தூதர் முனீர் அக்ரம் பேசியுள்ளார். அப்போது உக்ரைன் போர் சூழலை அதற்கு இணையாக கூறி ஒப்பிடுவதற்கு அவர் முயற்சி செய்துள்ளார். இதற்கு கடுமையான முறையில் பதில் அளித்த ஐநாவிற்கான நிரந்தர இந்திய பிரதிநிதி ரிசீரா கம்போஸ் என்னுடைய நாட்டிற்கு எதிராக மடத்தனம் வாய்ந்த மற்றும் அர்த்தமற்ற விஷயங்களை குறிப்பிட்டு ஐநா அமைப்பை மீண்டும் ஒருமுறை தவறாக பயன்படுத்த வெளிநாட்டு குழு ஒன்று முயற்சி செய்வதை நாம் பார்க்கின்றோம்.

இதில் ஆசிரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பொய்களை கூறும் மனப்பாங்குடன் இது போன்ற பேச்சுக்கள் அமைந்திருக்கிறது. இவை எத்தகைய மதிப்பிற்கும் உரியவை அல்ல ஜம்மு மற்றும் காஷ்மீரின் முழு பகுதியையும் இப்போதும் எப்போதும் இந்தியாவுடன் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாகும். எங்களுடைய குடிமகன்கள் வாழ்க்கைக்கான மற்றும் சுதந்திரமுடன் செயல்படுவதற்கான உரிமைகளை அனுபவிக்கும் விதமாக எல்லை கடந்த பயங்கரவாத செயலை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என அவர் நேரடியாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |