ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அப்போது பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக பெண்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கக்கூடிய வகையில் கட்டுப்பாடுகளை தொடர்ந்து விதித்து வருகின்றனர். அதாவது கடந்த சில நாட்களுக்கு முன் ஆப்கானிஸ்தானை சேர்ந்த சிறுமிகள் 6 ஆம் வகுப்பு மேல் படிப்பை தொடர கூடாது என்று தலீபான்கள் தடை விதித்தது. இது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் பணிபுரியும் அனைத்து பெண்களும் ஹிஜாப் அணிவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. ஆனால் தற்போது ஆப்கானிஸ்தானில் உள்ள உதவி குழுவில் பணியாற்றும் பெண் ஊழியர்களும் இனி கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என்று தலீபான்கள் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “எந்தப் பெண் ஊழியராவது ஹிஜாப் அணியாமல் இருந்தால் அவர்களிடம் கட்டாயம் இதை அணிய வேண்டும் என ‘கண்ணியமான’ முறையில் எடுத்துச் சொல்லப்படும் என்று தெரிவித்துள்ளது.