Categories
மாநில செய்திகள்

ஐநா பொதுச் செயலாளருடன் மத்திய மந்திரி…. இன்று சந்திப்பு… வெளியான ட்விட்டர் பதிவு…!!!!!

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான 2 பிளஸ் 2  பேச்சுவார்த்தை அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடந்துகொண்டிருக்கிறது. கடந்த 11ஆம் தேதி தொடங்கிய இந்த பேச்சுவார்த்தையில் மத்திய வெளியுறவு மந்திரி திட்டங்கள் மற்றும் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆகிய இருவரும் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி கிளின்டன் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இந்த பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த போது, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எரிபொருள் வாங்குவது குறித்த செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு பதில் அளித்த மத்திய மந்திரி ஜெய்சங்கர் நீங்கள் இந்தியா ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் வாங்குவது குறித்து பார்த்தீர்களானால் உங்கள் கவனம் ஐரோப்பாவில் இருக்க வேண்டுமென ஆலோசனை வழங்குகிறேன். மேலும் எங்கள் எரிபொருள் பாதுகாப்பிற்காக ரஷ்யாவிடம் நாங்கள் எரி பொருள் வாங்குகிறோம். அந்த கணக்கில் பார்த்தோமானால் ரஷ்யாவிடமிருந்து ஐரோப்பா ஒருநாள் மதியம் வாங்கும் பொருளைவிட ரஷ்யாவிடமிருந்து இந்தியா ஒரு மாதம் மொத்த எரிபொருளின் அளவு குறைவு எனக் கூறியுள்ளார்.

இதன்பின், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான நான்காவது 2 பிளஸ் 2 பேச்சுவார்த்தையிலும் ஜெய்சங்கர் பங்கேற்றுள்ளார். இதில், அமெரிக்க வர்த்தக செயலாளர் கினா ராய்மண்டோ மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கேத்தரீன் தை ஆகியோரிடம் பேச்சுவார்த்தி நடத்தினார். அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ஹோவர்ட் பல்கலை கழகத்தில் மாணவர்களிடையே உரையாடிய ஜெய்சங்கர், கொரோனா தொற்றால் அனைத்து நாடுகளும் பெரிய அளவில் பாதிப்புக்கு ஆட்பட்ட அனுபவங்களை பற்றி பேசியுள்ளார்.
இதனையடுத்து, ஐ.நா. பொது செயலாளர் ஆன்டனியோ கட்டிரெசை இன்று இந்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் நேரில் சந்தித்து பேசுகிறார்.  இதற்காக அவர் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு புறப்பட்டு சென்றார். அவரை ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி நேரில் சென்று வரவேற்றார்.  இந்த பயணத்தில் மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர், ஐ.நா. பொது செயலாளர் ஆன்டனியோ கட்டிரெசை சந்திக்க இருக்கிறார் என திருமூர்த்தி டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

Categories

Tech |