Categories
உலக செய்திகள்

ஐநா பொது செயலாளரின் புதிய தொழில்நுட்பத் தூதர்…. யார் தெரியுமா…?

ஐநா சபையின் பொதுச் செயலாளராக அண்டனியோ குட்ரோஸ்  இருக்கிறார். இவரின் தொழில்நுட்ப தூதராக இந்தியாவை சேர்ந்த அமர்தீப் சிங்கில் என்பவர் நியமிக்கப்பட்டு இருக்கின்றார். இவர் சர்வதேச டிஜிட்டல் ஒத்துழைப்புக்கான திட்டங்களை ஒருங்கிணைப்பதற்கான தொழில்நுட்பம் மீதான தூதராக செயல்படுவார் என கூறப்பட்டுள்ளது. மேலும் அமந்தீப் சிங் கில் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் பிடெக்  பட்டம் பெற்று இருக்கின்றார்.

அதன்பின் லண்டனிலுள்ள கிங்ஸ் கல்லூரியில் அணுக்கரு கற்றலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.  அமந்தீப் சிங் கில்கடந்த 1992 ம்  வருடத்தில் இந்திய வெளியுறவுத் துறையில் பணியில் சேர்ந்துள்ளார். ஜெனிவா ஆயுத குறைப்பு மாநாட்டில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக இருந்திருக்கின்றார். அவர் ஐநாவில் செயல் இயக்குனராகவும் டிஜிட்டல் ஒத்துழைப்புக்கான ஐநா பொதுச் செயலாளரின் உயர்மட்டக் குழுவின் தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார். மேலும் அவர் தற்போது ஜெனிவாவில் உள்ள சர்வதேச மற்றும் மேம்பாட்டு ஆய்வு நிறுவனத்தில் சர்வதேச டிஜிட்டல் உடல்நலம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிக் கூட்டு திட்டத்தின்  தலைமை செயல் அதிகாரியாக இருக்கிறார்.

Categories

Tech |