Categories
உலகசெய்திகள்

ஐந்தறிவு ஜீவனின் பாசம்…. ரஷ்ய ராணுவத்தால் உயிரிழந்த எஜமான்…. காவலுக்கு காத்திருந்த நாய்….!!

உக்ரைனில் ரஷ்ய படை வீரர்களால் கொல்லப்பட்ட தனது எஜமானருக்கு அருகே நாய் ஒன்று படுத்திருக்கும் புகைப்படம் காண்போர் மனதை உருகுலைய வைத்துள்ளது.

உக்ரேனுக்கும், ரஷ்ய ராணுவத்துக்குமிடையே ஒரு மாத காலத்திற்கும் மேலாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதில் அதீத பலம் வாய்ந்த ரஷ்யா உக்ரேனின் பல பகுதிகளில் குண்டு மழை பொழிந்து வருகிறது. இவ்வாறு இருக்க சமீபத்தில் ரஷ்யப் படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்விக்கு அருகேயிருக்கும் புச்சா, இர்பின் ஆகிய பகுதிகளிலிருந்து வெளியேறியுள்ளது. அவ்வாறு ரஷ்ய படைகள் வெளியேறியதற்குப் பிறகு அப்பகுதிகளுக்கு ராணுவ வீரர்களும் பொதுமக்களும் சென்றுள்ளார்கள்.

அப்போது அங்குள்ள தெருக்களில் பொதுமக்கள் பலரும் கொல்லப்பட்டு உடல் சிதறிய நிலையில் கிடந்துள்ளார்கள். இந்நிலையில் இறந்து கிடந்த தனது எஜமானரின் உடலுக்கு அருகே நாய் ஒன்று காவலுக்கு இருந்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி காண்போர் மனதை உருகுலைய வைத்துள்ளது.

Categories

Tech |