Categories
சினிமா தமிழ் சினிமா

ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பு….”மகளுக்காக களமிறங்கும் நடிகர் அருண்பாண்டியன்”..!!

பிரபல நடிகர் அருண்பாண்டியன் பல ஆண்டுகள் கழித்து தனது மகளுக்காக மீண்டும் நடிக்க உள்ளார்.
பிரபல தமிழ் நடிகர் அருண்பாண்டியன். நடிகர் தயாரிப்பாளர் வினியோகஸ்தர், அரசியல்வாதி என பன்முக திறன் கொண்டவர் நடிகர் அருண்பாண்டியன். 1985 இல் வெளியான சிதம்பர ரகசியம் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். 1986 இல் வெளியான ஊமைவிழிகள் திரைப்படத்தின் மூலமாக பிரபலமானார். இணைந்த கைகள் உள்பட ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ள அருண்பாண்டியன் செந்தூரப்பூவே அங்காடித்தெரு உட்பட பல படங்களை தயாரித்துள்ளார்.
இடையில் அரசியல்வாதியாகவும் அவதாரமெடுத்த அருண் பாண்டியன் பேராவூரணி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்தார். நடிகர் அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியனும் படங்களில் நடித்து வருகிறார். படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகர் அருண்பாண்டியன் தன் மகளுக்காக ஐந்து ஆண்டுகளுக்கு பின்பு அன்பிற்கினியாள் என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். இப்படம் தந்தை மகள் பாசத்தை மையமாகக் கொண்ட திரைப்படம் என்பதால் தன் சொந்த மகளுக்கே தந்தையாக இந்த படத்தில் நடிக்கிறார்.

Categories

Tech |