ஐந்து முன்னணி இயக்குனர்கள் சேர்ந்து உருவாக்கிய”புத்தம் புது காலை” என்ற திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களாக வலம்வரும் கௌதம்மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன்,கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சுகாசினி மணிரத்தினம்ஆகிய இயக்ககுனர்கள் இணைந்து உருவாக்கிய ஆந்தாலஜி திரைப்படம் “புத்தம் புது காலை” .
“இளமை இதோ இதோ” என்ற கதையை சுதா கொங்கரா இயக்கியுள்ளார், இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் ஊர்வசி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
கௌதம் வாசுதேவ் மேனன் “அவரும் நானும் “/ “அவளும் நானும்” என்ற கதையை இயக்கி உள்ளார். இதில் ஸ்ரீவர்மா, எம்எஸ் பாஸ்கர் நடித்துள்ளனர்.
கார்த்திக் சுப்புராஜ் “மிராக்கிள்” என்ற கதையை இயக்கியுள்ளார். இப்படத்தில் பாபி சிம்ஹா ,முத்துக்குமார் நடித்துள்ளனர்.
ராஜீவ் மேனன் இயக்கியிருக்கும் “ரீயூனியன்” படத்தில் ஆண்ட்ரியா, லீலா சாம்சன்,குருசரண் ஆகியோரும் நடித்துள்ளனர்.
சுகாசினி மணிரத்னம் இயக்கி நடித்திருக்கும்‘காஃபி எனி ஒன்’ படத்தில் ஸ்ருதிஹாசன்,அனுஹாசன் நடிக்கின்றனர்.
வரும் 16ம் தேதி 200க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த ஆந்தாலஜி திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அமேசான் ப்ரைம் தயாரிப்பில் இயக்கப்பட்டிருக்கும் “புத்தம் புது காலை” திரைப்படம் ஊரடங்கு உத்தரவின் போது படப்பிடிப்பிற்காக தென்னிந்திய திரைப்பட ஊழியர் சம்மேளனம்(FEFSI) கூறிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளில் பின்பற்றி தான் இப்படமாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.