ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்களின் ஏலம் பிப்ரவரி 18ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
2021 ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்களின் ஏலம் பிப்ரவரி 18ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் ஏலத்தில் பங்கேற்கும் விதமாக ஒவ்வொரு அணியியும் சில வீரர்களை விதித்திருந்தனர். இதுகுறித்த அறிவிப்பை ஐபிஎல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இந்த ஏலத்தை ரசிகர்கள் எந்த அளவுக்கு ஆழமாக எதிர்நோக்கி உள்ளார்கள் என்று அந்த பதிவில் கேள்வி எழுப்பியுள்ளது. இதில் மொத்தம் 57 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய வீரர்களை தேர்ந்தெடுக்கும் இடம் சென்னையில் நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.