Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் கடைசி போட்டி…. நிறைவு விழா நடத்த பிசிசிஐ திட்டம்…..!!!!

ஐபிஎல் தொடரின் 15-ஆவது சீசன் கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முடிவின்போது நிறைவு விழாவை நடத்துவதற்கு பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் தொடரின் ஆரம்ப நிகழ்ச்சியும் நிறைவு நிகழ்ச்சியும் நடைபெற வில்லை.

தற்போது தொடர்ந்து தொற்று குறைந்து வருவதால் ஆண்டு நிறைவு விழாவை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதன்படி கடைசி ஐபிஎல் போட்டி மே 29-ஆம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. அன்று நிறைவு நிகழ்ச்சி நடத்துவதற்கு மேடை ஏற்பாடு செய்ய நிறுவனங்களுக்கு டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கான ப்ரோபசல் ஒரு லட்சத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 25 வரை இந்த ப்ரோபசல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |