செல்போன் மூலம் ஐபிஎலில் சூதாட்டம் நடத்திய கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கானாவின் சைபராபாத் பகுதியில் செல்போன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 23 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் 7 இடங்களில் ரோந்து மற்றும் சோதனையில் ஈடுபட்ட போலீசார் இந்த கும்பலை கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து சுமார் 93 லட்சம் பணம் 5 கார்கள் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய லேப்டாப் மற்றும் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதன் மொத்த மதிப்பு ரூபாய் 2 கோடியே 2 லட்சம் இருக்கலாம் என காவல் ஆணையர் ஸ்டீபன் ரவீந்தர் தெரிவித்துள்ளார்.