Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

ஐபிஎல் சூதாட்ட வழக்கு…. 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு…!!!

2013-ம் வருடம் ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சில வீரர்கள் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த விஷயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த கேப்டன் தோனி உள்ளிட்ட சில வீரர்களுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து எம்எஸ் தோனி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் ஐபிஎல் சூதாட்ட விவகாரத்தில் தன்னைப் பற்றி அவதூறு பரப்பி நிகழ்ச்சி நடத்தியதற்காக ரூபாய் 100 கோடி நஷ்ட ஈடு கேட்டு இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனி தொடர்ந்த வழக்கை இரண்டு வாரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Categories

Tech |