ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடரின் 13வது சீசனுக்கான போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியின் டைட்டிலை ஸ்பான்சர் செய்வதற்காக பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. அதற்கான விண்ணப்பங்களை வரும் ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் அனுப்ப வேண்டுமென பிசிசிஐ அறிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டு.களாக ஐபிஎல் போட்டிகளில் டைட்டில் ஸ்பான்சராக சீனவை சேர்ந்த பிரபல நிறுவனமான விவோ நிறுவனம் இருந்து வந்தது. ஆனால் கள்வன் பள்ளத்தாக்கில் சீனா- இந்தியப் படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக ஐபிஎல் போட்டிகளின் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விலக உள்ளதாக விவோ அறிவித்துள்ளது. இதனால் ஐபிஎல் தொடரின் டைட்டிலை ஸ்பான்சர் செய்ததற்காக ஜியோ, அமேசான், டாட்டா குழுமம், அதானி குழுமம், பைஜூஸ்,ட்ரீம் 11 உள்ளிட்ட பல நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் இதில் தற்போது இணைந்துள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமையை பெற விரும்பும் நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை வரும் ஆகஸ்ட் 14-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்றும், குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேரவில்லை என்றால் அந்நிறுவனத்தின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் இந்த டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை பெரும் நிறுவனம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 18 முதல் டிசம்பர் 31ம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ள முடியும் அதேசமயம் இதில் பங்கேற்க உள்ள நிறுவனங்கள் ரூபாய் 300 கோடிக்கு அதிகமாக மட்டுமே ஏலத்தொகை நிர்ணயிக்க வேண்டும் எனவும் பிசிசிஐ கூறியுள்ளது.