ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர் வருகிற 26-ந் தேதி தொடங்கவுள்ள முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இதையடுத்து இங்கிலாந்து வீரரான ஆல்-ரவுண்டர் மொயின் அலி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டத்தில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மொயின் அலி தற்போது இங்கிலாந்தில் இருந்து வரும் நிலையில் இந்தியா வருதற்காக விசாவுக்கு விண்ணப்பித்துள்ளார் . ஆனால் அவருக்கு இன்னும் பயணத்துக்கான விசா கிடைக்காத்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டத்தில் மொயின் அலி விளையாட மாட்டார் என்பது தெரிகிறது. மொயின் அலி விளையாடவில்லை என்றால் அவருக்கு பதிலாக நியூசிலாந்து மேட்ஸ்மேன் கான்வே இந்த ஆட்டத்தில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.