Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் தொடரில்….. 21-வது ஹாட்ரிக் சாதனை படைத்த யசுவேந்திர சாஹல்…..!!!

ஐபிஎல் தொடரின் 21-வது ஹாட்ரிக் சாதனையை யசுவேந்திர சாஹல் படைத்துள்ளார்.

நேற்றைய ஆட்டத்தில், கொல்கத்தா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் யசுவேந்திர சாஹல் ஹாட்ரிக் சாதனையை படைத்துள்ளார். 17வது ஓவரில் அவர் ஸ்ரேயாஸ் அய்யர், ஷிவம் மவி, கம்மின்ஸ் ஆகியோரை அடுத்தடுத்து அவுட் செய்து சாதனை புரிந்துள்ளார். இதில் அமித் மிஸ்ரா அதிகபட்சமாக 3 முறை ஹாட்ரிக் சாதனை படைத்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஐ.பி.எல். வரலாற்றில் 21-வது ‘ஹாட்ரிக்’ நிகழ்வாகும்.  ஐபிஎல் தொடரிலேயே அமித் மிஸ்ரா அதிகபட்சமாக முதல் முறை ஹாட்ரிக் சாதனை புரிந்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக யுவராஜ்சிங் ஒரே ஆண்டில் இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்தார். 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் ஹாட்ரிக் சாதனையை யாரும் நிகழ்த்தவில்லை. அதைத் தொடர்ந்து தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் யசுவேந்திர சாஹல் இந்த சாதனையை புரிந்துள்ளார்.

Categories

Tech |