கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நிலையில், நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடந்து வந்தது.கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இந்த போட்டிகள் நடந்து வந்தன. 14வது ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், பல்வேறு வீரர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
அதனால் ஐபிஎல் தொடரை ஒத்திவைப்பதாக பிசிசிஐ நிர்வாகம் அறிவித்தது. இதன் காரணமாக பிசிசிஐக்கு 2 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேரடி ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் டிவி நிறுவனம் பெற்றுள்ள நிலையில் 1690 கோடி இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.