ஐபிஎல் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து மோதிக்கொண்டன. இதில் இளம் வீரரான பதோனி எதிர்பாராத வகையில் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததுள்ளார். மேலும் இந்திய இளம் வீரராக 40 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து 22 வயதில் அரைசதம் அடித்தது பெருமை கொள்ளத்தக்கது.
இந்நிலையில் முதல் வீரராக டெல்லி அணியில் இடம் பிடித்த கோசுவாமி 19 வயதில் அரை சதம் அடித்தார் எனவும் 20 வயதில் 2-வதாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம் பிடித்த படிக்கல் அரை சதம் அடித்தார் எனவும் 3-வதாக இந்திய வீரர் பதோனி 22 வயதில் அரை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.