மத்திய பிரதேச மாநிலத்தில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் சட்டவிரோதமான முறையில் ஈடுபட்டு வந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் நகரில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை மையமாக கொண்டு சிலர் சட்டவிரோதமான முறையில் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனால் தீவிர கண்காணிப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வந்தனர். அப்போதே இந்தூர் ராஜேந்திரன் நகரில் சில நபர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதை கண்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து ராஜேந்திர நகருக்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தி 6 பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டது வெளிச்சத்திற்கு வந்தது. கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 18 செல்போன்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.