ஐபிஎல் போட்டி நடத்துவதற்காக டி20 உலகக்கோப்பை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அக்தர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது ஆஸ்திரேலியாவில் அக்டோபர் நவம்பர் மாதத்தில் நடைபெற இருந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இப்போட்டியை ஒத்திவைப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியானது ஒத்திவைக்கப்பட்ட நிலையில் பிசிசிஐ, ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை செப்டம்பர் முதல் நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த ஐபிஎல் போட்டியானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என்று ஐபிஎல் நிர்வாக குழு தலைவரான பிரிஜேஷ் படேல் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயப் அக்தர் கூறுகையில் ” T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருந்த நிலையிலும் ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கு எவ்வித பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ரத்துசெய்துள்ளனர், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியானது என்னவானால் என்ன?” என விமர்சனம் செய்துள்ளார்.