Categories
விளையாட்டு

ஐபிஎல் 2020 பரிசுத்தொகை பாதியாக குறைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவிப்பு… அதிருப்தியில் வீரர்கள்!

ஐபிஎல் 2020 தொடரை வெள்ளும் சாம்பியன் அணிக்கு பரிசுத் தொகை பாதியாக குறைக்கப்படுகிறது என செய்தி வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 2020ம் ஆண்டுக்கான தொடர் வரும் 29ம் தேதி முதல் துவங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் போட்டி சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. போட்டிகளில் பங்கேற்பதற்காக வீரர்கள் தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

மும்பையில் முதல் போட்டி நடைபெற இருந்தாலும் ஒருசில நாட்கள் சென்னையில் பயிற்சியில் ஈடுபட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் சென்னை பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையில் போட்டிக்கான பரிசுத் தொகையை ஐபிஎல் நிர்வாகம் தற்போது திடீரென்று குறைத்துள்ளது. அதன்படி இந்தாண்டு பரிசுத் தொகை 25 கோடியாகக் குறைக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோப்பை வெல்லும் அணிக்கு 10 கோடி ரூபாய் பரசுத் தொகையும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 6.25 கோடி ரூபாயும், 3ஆவது மற்றும் 4ஆவது இடம்பிடிக்கும் அணிக்கு தலா ரூ.4.375 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என்று ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. போட்டிக்கான செலவினங்களை குறைக்கும் விதமாக ஐபிஎல் தொடருக்கான பரிசுத்தொகை குறைக்கப்படுவதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு வரையில் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் அணிகளுக்கு ரூ.50 கோடி பகிர்ந்து கொடுக்கப்பட்டது. கோப்பை வெல்லும் அணிக்கு 25 கோடியும், 2ஆம் இடம்பெறும் அணிக்கு 12.5 கோடியும், 3ஆவது, 4ஆவது இடம்பெறும் அணிகளுக்கு தலா ரூ.6.25 கோடி வரை பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |