Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் 2022…. அடிச்சு சொல்லுவேன்…. அவரு 15-17 கோடிக்கு ஏலம் போவாரு!…. அஸ்வின் கணிப்பு….!!!!

சமீபத்தில் பிசிசிஐ, ஐபிஎல் 15-வது சீசனுக்கு முன் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள மெகா ஏலத்தில் கலந்துகொள்ளும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. மேலும் மொத்தம் 1,214 வீரர்கள் மெகா ஏலத்திற்கு பதிவு செய்திருந்த நிலையில் அதில் 590 பேர் மட்டுமே தகுதியானவர்கள் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. அந்த 590 வீரர்களில் 355 பேர் உள்ளூர் போட்டிகளில் மட்டும் பங்கேற்றவர்கள், 228 பேர் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்ற வீரர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு மட்டுமில்லாமல் இந்த மெகா ஏலத்தில் 7 பேர் அண்டை நாடு என்ற அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் 220 வெளிநாட்டு வீரர்களும், 370 இந்திய வீரர்களும் உள்ளனர். இந்த மெகா ஏலத்தில் டேவிட் வார்னர், ஷ்ரேயஸ் அய்யர் உள்ளிட்ட முக்கிய வீரர்களும் இடம் பெற்றுள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ரசிகர்களும் எந்தெந்த வீரர்கள் எந்த அணிக்கு போவார்கள் ? என்பதை காண ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், மும்பை இந்தியன்ஸ் வீரர் இஷான் கிஷன் பெரிய தொகைக்கு ஏலம் போவார் என்று கூறியுள்ளார். அதாவது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்த ரவிசந்திரன் அஸ்வின், “இஷான் கிஷன் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வல்லவர். இவரை மிடில் வரிசை வீரராக மும்பை இந்தியன்ஸ் அணி பயன்படுத்தியது.

இறுதியில் டாப் ஆர்டரிலும் இஷான் கிஷன் விளையாடினார். இவரிடம் மொத்தம் ஐந்து தகுதிகள் உள்ளது. மிடில் வரிசை பேட்ஸ்மேன், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர், இடதுகை பேட்ஸ்மேன், கீப்பராக நின்று ரிஷப் பந்த்-ஐ விட நன்றாக ஸ்லெட்ஜிங் செய்யக்கூடியவர் இஷான் கிஷன். இப்படிப்பட்ட ஒருத்தரை எந்த அணிக்கு தான் பிடிக்காமல் போகும். எனவே இஷான் கிஷனுக்கு நிச்சயமாக கடும் போட்டி இருக்கும். எனவே அவர் 15-17 கோடிக்கு ஏலம் போவார்” என்று அஸ்வின் கூறியுள்ளார்.

Categories

Tech |