ஐபிஎல் ஆட்டத்தில் சிறந்த ஆட்டக்காரராக இருந்த ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்து போட்டியிட்டு வந்தார். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் எந்த அணியும் ரெய்னாவை ஏலத்தில் எடுக்காததால் வர்ணனையாளராக மாறியுள்ளார். இந்நிலையில் ஐபிஎல் குறித்து கருத்து கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அனைத்து அணிகளும் ஒவ்வொரு வகையில் சிறப்பான அணிதான் எனத் தெரிவித்த அவர்,
இம்முறை பெங்களூர், சென்னை, லக்னோ மற்றும் டெல்லி ஆகிய அணிகள்தான் ப்ளே ஆப் சுற்றுக்குச் செல்ல வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளார். மேலும் ஐபிஎல்லில் அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்ற அணியும் ஐபிஎல்லில் மிகவும் வலுவான அணியாக கருதப்படுவதுமான மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட மற்ற 6 அணிகளுள் எதுவும் இம்முறை ப்ளே ஆப் செல்லாது எனவும் அவர் கணித்துள்ளார். அனுபவ வீரரான ரெய்னாவின் இந்த கருத்து கணிப்பு சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது.