சென்னை அடையாற்றில் நேற்று முன்தினம் பாஜக சார்பில் இந்திய அரசிலமைப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கராத்தே தியாகராஜன் மற்றும் கரூர் தியாகராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அதன் பிறகு கராத்தே தியாகராஜனின் பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது. இவர் முதலில் அதிமுகவிலும், அதன்பிறகு காங்கிரஸ் கட்சியில் இருந்தார்.
இவர் தற்போது பாஜகவில் இருப்பதால் திமுக அரசை விமர்சனம் செய்து வருகிறார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய போது, திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அவரை துணை முதல்வராக்க சிலர் மன அழுத்தம் கொடுக்கின்றனர் என்று அவர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து தமிழக அரசு நடவடிக்கையை மத்திய அரசு கண்காணித்து வருகிறது. எனவே மாநில அரசுக்கள் தங்கள் விருப்பம் போல் ஆட்சி செய்ய முடியாது. தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் ரொம்ப ஆட வேண்டாம் என்றும் உங்ககளை பற்றிய அனைத்து விவரங்களும் அண்ணாமலையிடம் உள்ளது. அதனால் உங்களுக்குப் பிரமோஷன் மற்றும் பென்சன் கிடைக்காது என்று எச்சரித்துள்ளார். எனவே பாஜக மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கிறது என்று அக்கட்சியில் சேர்ந்தவர்கள் ஐபிஎஸ் அதிகாரிகளை மிரட்டும் படி பேசுவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.