ஒருசில ஐபோன் மாடல்களில் வாட்ஸ்அப் சேவை கிடையாது என வாட்ஸ்அப் நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp-பை பயன்படுத்தி வருகின்றன. பயனர்களின் வசதிக்கேற்றவாறு அவ்வபோது whatsapp நிறுவனம் புதிய புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகின்றது. இந்த அப்டேட்டுகள் பயனாளர்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. அப்டேட் மட்டுமல்லாமல் ஒரு சில தகவல்களையும் வெளியிட்டு வருகின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு சில செல்போன் மாடல்களுக்கு whatsapp சேவை கிடையாது என்று அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து தற்போது ஐபோன் மாடல்களில் சிலவற்றிற்கு whatsapp சேவை கிடையாது என்று whatsapp நிறுவனம் தெரிவித்துள்ளது.
வரும் அக்டோபர் மாதம் முதல் ஐபோன் 5 மற்றும் ஐபோன் 5சி மாடல் ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் சேவை கிடையாது என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோன்று ஐபோன் 10 மற்றும் ஐபோன் 11 இயங்குதளங்களில் விளங்கும் ஐபோன்களில் அக்டோபர் 24 முதல் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளது. இதனால் போன் பயன்படுத்துபவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.