வெந்து தணிந்தது காடு திரப்படத்தின் ப்ரோமோஷனுக்கு பெரிய காரணம் நடிகர் கூல் சுரேஷ் தான். அவர்தான் வாரந்தோறும் தியேட்டரில் வெந்து தணிந்ததது காடு, இந்த படத்திற்கு வணக்கத்த போடு என எல்லா youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்துவந்தார். இதனால் அப்படத்தின் பெயர் அதிக அளவில் ரீச்சாக கூல்சுரேஷ் தான் காரணம் என சிம்புவே நன்றி கூறியிருந்தார்.
இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டாகி உள்ள நிலையில் இயக்குனர் கெளதம் மேனனுக்கு ஒரு புல்லட் பைக் மற்றும் சிம்புவுக்கு ஒரு விலையுயர்ந்த காரை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பரிசாக கொடுத்தார். இதையடுத்து கூல் சுரேஷுக்கு எந்த பரிசும் தரவில்லையா என அப்போதே நெட்டிசன்கள் கேள்வியெழுப்பினார்கள்.
இந்நிலையில் கூல் சுரேஷுக்கு, தயாரிப்பாளர் ஐபோன் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். மேலும் கூல் சுரேஷின் குழந்தைகளின் கல்விச்செலவு முழுவதையும் தான் ஏற்றுக்கொள்வதாகவும் ஐசரி கணேஷ் உறுதியளித்திருக்கிறார். அவர் சிம்புவுக்கும், கவுதம் மேனனுக்கும் கொடுத்த பரிசைவிட எனக்கு கொடுத்தது தான் மிகப் பெரிய பரிசு என கூல் சுரேஷ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
அத்துடன் ஐசரி கணேஷ் இனிமேல் தனக்கு கடவுள் என சொல்லி அவரது புகைப்படத்தை கூல் சுரேஷ் தன் வீட்டு பூஜை அறையில் வைத்து வணங்கியபடி புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.