இந்தியாவில் கடந்த ஆண்டு சந்தைக்கு வந்த iPhone 12 மற்றும் iPhone 12 Mini மாடல்களில் Flipkart பெரும் தள்ளுபடியுடன் வந்துள்ளது. அதாவது ஐபோன் 12 64ஜிபி விலை ரூ.65,900க்கு இருந்து ரூ.53,999 ஆகவும், 128 ஜிபி விலை ரூ.70,900ல் இருந்து ரூ.64,999 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதனை போலவே ஐபோன் 12 மினி 64ஜிபி விலை ரூ.59,900 இருந்து ரூ.40,999க்கு விற்கப்படுகிறது. மேலும் 128ஜிபி மாடலின் விலை ரூ.54,999 மற்றும் 256 ஜிபி வேரியண்ட் ரூ.64,999க்கு கிடைக்கிறது. இருப்பினும், இந்த தள்ளுபடிகள் தற்போது அமேசானில் கிடைக்கவில்லை.
நீங்கள் எந்த சேமிப்பக விருப்பத்தை தேர்வு செய்தாலும், iPhone 12 கருப்பு மற்றும் நீல நிறத்தில் மட்டுமே கிடைக்கும். அதனைப்போலவே 12 Mini கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, வெள்ளை மற்றும் ஊதா நிறங்களில் கிடைக்கிறது. மேலும் ஐபோன் 11க்கும் சிறந்த சலுகைகள் இப்போது கிடைக்கின்றன. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் Flipkart மூலம் 64GB சேமிப்பு மாடலை ரூ.49,900க்கு வாங்கலாம். தற்போது, கருப்பு மற்றும் சிவப்பு நிறங்கள் மட்டுமே உள்ளது என்று தெரிவித்துள்ளது.