கோவில் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு பூவன நாதசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதனை அடுத்து சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்ற பிறகு காலை 7 மணி முதல் 8 மணிக்குள் கொடியேற்றப்பட்டது. இன்று முதல் தொடங்கிய திருவிழா வருகிற 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. திருவிழாவில் 9-ஆம் நாள் (19- ஆம் தேதி) மண்டகப்படி தாரர்களான வணிக வைசிய சங்கத்தினர் சார்பில் காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது.