திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக நெல்லைப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடத்தின் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஐப்பசி திருக்கல்யாணம் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாக உள்ளது. அதன்படி இந்த ஆண்டிற்கான ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு இன்று காலை 9 மணிக்கு அம்மன் சன்னதியில் உள்ள கொடி மரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து அம்பாளுக்கும் சுவாமிக்கும் சிறப்பு அலங்காரங்களும் அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெற்றது. இதனை அடுத்து வருகின்ற 21ஆம் தேதி இரவு காந்திமதி அம்பாள் தங்க முலாம் பூசப்பட்ட சப்பரத்தில் கம்பா நதி காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றடைவார். இதனை தொடர்ந்து 22ம் தேதி பகல் 12 மணிக்கு கம்பா நதியில் காந்திமதி அம்பாளுக்கு நெல்லையப்பர் காட்சி கொடுத்து மாலை மாற்றும் நிகழ்ச்சியும் நடைபெறும். அதன் பின் 23ஆம் தேதி காலை 4 மணிக்கு ஆயிரம் கால் மண்டபத்தில் நெல்லையப்பருக்கும் காந்திமதி அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடக்க இருக்கிறது. இந்த திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகின்றது.