கரூர் மாவட்டத்தில் உள்ள கோம்புபாளையம் பகுதியில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஐப்பசி மாதம் ஏகாதசியை முன்னிட்டு சீனிவாச பெருமாளுக்கு இளநீர், சந்தனம், தயிர், பால், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
Categories