ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க சபரிமலை நோக்கி செல்கின்றனர். இதனால் சபரிமலை நோக்கி செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இந்த நிலையில் பக்தர்களின் வருகை அதிகரிப்பதால் இருவழிப்பாதையை திறக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
குறிப்பாக தமிழகம், கர்நாடக மாநிலத்தில் இருந்து அதிகளவிலான பக்தர்கள் வருகை தருகின்றனர். காலையில் நடை திறக்கப்பட்டு 3 மணி நேரத்தில் சுமார் ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். எனவே அப்பாச்சி மேடு, நீலிமலை வழியாகவும் பக்தர்களை அனுமதிக்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது.