Categories
தேசிய செய்திகள்

ஐயப்ப பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. விமானத்தில் இப்படி ஒரு சலுகையா?…. அசத்தல் அறிவிப்பு…..!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 26ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில் சுவாமி தரிசனம் செய்ய கோடிக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். அதேசமயம் இந்த வருடம் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சபரிமலை செல்லும் பக்தர்கள் ஜனவரி 20ஆம் தேதி வரை தங்கள் பைகளில் தேங்காய் எடுத்துச் செல்ல விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. எளிதில் தீப்பிடிக்க கூடியது என்பதால் தேங்காய் களுக்கு விமானத்தில் அனுமதி தரப்படுவது இல்லை. இதனால் ஐயப்ப பக்தர்கள் சீசன் காலத்தில் விமானங்களை பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. தற்போது தற்காலிக அடிப்படையில் தேங்காய்களை அனுமதிக்க விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |