Categories
ஆன்மிகம் கோவில்கள்

ஐயப்ப பக்தர்களே… நாளை மகர விளக்கு பூஜை…!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை மகரவிளக்கு பூஜை நடப்பதால் ஐயப்ப சுவாமி திரு ஆபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மண்டல மகர விளக்கு பூஜையின்போது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்ய வேண்டும் எனவும், குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கபடுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கடந்த மாதம் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மகரவிளக்கு பூஜை நாளை நடக்கிறது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக, மகரஜோதி விழாவுக்கு 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐயப்ப சாமி நாளை திரு ஆபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

Categories

Tech |