Categories
தேசிய செய்திகள்

ஐயப்ப பக்தர்கள் சென்ற பேருந்து விபத்து…. அதிகாலையில் நடந்த பெரும் சோகம்….!!!!

ஈரோட்டைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பினர். அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் வந்த மினி பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலை சென்ற ஈரோட்டை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் மகரவிளக்கு தரிசனம் செய்துவிட்டு திரும்பியுள்ளனர். அப்போது அவர்கள் வந்த மினிபஸ் பத்தினம்திட்டா என்ற இடத்திற்கு அதிகாலையில் வந்த போது, பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |