திண்டுக்கல் மாவட்டம் பழனி வரதமாநதி அணை நீரில் மூழ்கி ஐயப்ப பக்தர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வரதமாநதி அணை அருகே ஐயப்ப பக்தர்கள் 3 பேர் நின்று செல்பி எடுத்துள்ளனர். அப்போது செல்பி எடுத்த பக்தர்கள் மூன்று பேரும் அடுத்தடுத்து அணை நீரில் தவறி விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Categories