மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பக்கத்தில் உள்ள அய்யனார் கவுண்டன்பட்டியில் வசிப்பவர் இளங்கோவன். இவருடைய மகன் பிரதீப் கூலி வேலை செய்து வருகிறார். பிரதீப்புக்கும், அவருடைய தந்தைக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் பிரதீப்புக்கு நேற்று திருமணம் நடக்க இருந்துள்ளது. ஆனால் திருமணத்திற்கு முந்தைய நாள் சனிக்கிழமை பிரதீப் குடிபோதையில் மீண்டும் தன்னுடைய தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் கோபமடைந்த இளங்கோவன் தன்னுடைய மகன் என்றும் பாராமல் கோடரியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இளங்கோவனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். விடிந்தால் திருமணத்தை வைத்துவிட்டு குடும்ப சண்டை காரணமாக தன்னுடைய மகனை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.